
செய்திகள் தமிழ் தொடர்புகள்
613 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்றனர்
சென்னை:
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் 613 அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்லூரிகளில் சேருவதற்கான ஆணைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 6,600 எம்பிபிஎஸ் இடங்கள், 1,583 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.
இதில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 494 எம்பிபிஎஸ் இடங்கள், 119 பிடிஎஸ் இடங்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், சிறப்பு பிரிவு (மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசு, விளையாட்டு வீரர்) சிறப்பு பிரிவு கலந்தாய்வு மற்றும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு இடங்களுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நேரடியாக நேற்று சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நடந்தது.
இதில் தேர்வான மாணவ, மாணவிகளுக்கு கல்லூரிகளில் சேருவதற்கான ஆணைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
இதன்படி 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் விவசாயி, கூலி தொழிலாளி உட்பட ஏழை குடும்பத்தை சேர்ந்த 613 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:28 pm
கவினும் நானும் உண்மையா காதலித்தோம்: காதலி சுபாஷினி வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
July 31, 2025, 7:21 pm
பாஜகவுடனான உறவு முறிந்தது: ஓபிஎஸ் தரப்பு அறிவிப்பு
July 28, 2025, 10:54 pm
திருச்சியில் கேம்பியன் பள்ளி முன்னாள் மாணவர்கள் 30-ஆம் ஆண்டு சந்திப்பு
July 28, 2025, 10:10 am
கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திரசோழன் நினைவு நாணயத்தை இந்தியப் பிரதமர் மோடி வெளியிட்டார்
July 27, 2025, 8:43 am
பிரதமர் மோடி தமிழக வருகை: பாதுகாப்புக் காரணங்களுக்காக திருச்சியில் கடைகளை அடைக்க கெடுபிடி
July 26, 2025, 2:35 pm