நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கனடிய பொது டென்னில் போட்டியிலிருந்து அரினா சபாலென்கா விலகல்

மொன்டிரியல்:

உலகின் முதல் நிலை வீராங்கனை அரினா சபாலென்காமொன்டிரியலில் நடைபெறவுள்ள கனடிய பொது டென்னில் போட்டியிலிருந்து விலகுவதாக கனடிய டென்னில் போட்டி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

27 வயதான பெலாருஸின் அரினா சபாலென்கா உடல்சோர்வு காரணமாக கனடியப் பொது டென்னிஸ் போட்டியில் பங்கேறவில்லை.

இதன் பின் நடைபெறவுள்ள அமெரிக்க ஹார்ட்-கோர்ட் டென்னிஸ் தொடரில் பங்கேற்பதில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் தன் உடல்நிலை விரைவில் சீராகும் என்று தாம் நம்புவதாகவும் சபாலென்கா நம்பிக்கை தெரிவித்தார்.

அடுத்த ஆண்டில் ரசிகர்களை மீண்டும் சந்திக்க ஆவலாக இருப்பதாகவும் தன்னுடைய நிலையைப் புரிந்து கொண்டு தனக்கு ஆதரவு வழங்கும் ரசிகர்களுக்கு சபாலென்கா நன்றி தெரிவித்தார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset