நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

வினீசியஸ் ஜூனியருக்கு நிமிடத்திற்கு 1,884 ரிங்கிட் சம்பளம்

மாட்ரிட்:

வினீசியஸ் ஜூனியருக்கு நிமிடத்திற்கு  1,884 ரிங்கிட் சம்பளம் வழங்க சவூதி கிளப் முன்வந்துள்ளது.

சவூதி புரோ லீக்கின்  கிளப் ஒன்று ரியல்மாட்ரிட் நட்சத்திரம் வினீசியஸ் ஜூனியருக்கு கால்பந்து வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த பரிமாற்ற சலுகையை பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

ரியல்மாட்ரிட் உடனான புதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, 25 வயதான அவர் மத்திய கிழக்கில் கால்பந்து அதிகாரிகளுக்கு முக்கிய இலக்காக மாறிவிட்டார்.

பிரேசில் வீரரான வினீசியஸ், தற்போது உலகின் சிறந்த வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

மேலும் அவர் தனது செயல்திறனின் உச்சத்தில் இருக்கும்போது சவூதி புரோ லீக்கில் சேரக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வினீசியஸை விடுவிக்க ரியல்மாட்ரிட்டுக்கு சுமார் 1.72 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சலுகை வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

அதே வேளையில் வினீசியஸ் இந்த சலுகையை ஏற்றுக்கொண்டால், 

ஒரு மணி நேரத்திற்கு தோராயமாக 113,200 ரிங்கிட்டும்ற்றும் நிமிடத்திற்கு 1,884 ரிங்கிட்டும் சம்பாதிப்பார் என கூறப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset