நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

எம்ஆர்எம் வெட்ரன் கால்பந்து போட்டியில் 16 அணிகள் பங்கேற்றுள்ளன: ஹஸ்மா

சிரம்பான்:

எம்ஆர்எம் வெட்ரன் கால்பந்து போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன.

எம்ஆர்எம் கால்பந்து கிளப்பின் தலைவர் ஹஸ்மா முகமத் இட்ரிஸ் கூறினார்.

45வயதுக்கு மேற்பட்ட வெட்ரன் போட்டியாளர்களுக்காக இக்கால்பந்து போட்டி நடத்தப்படுகிறது.

இரண்டாவது ஆண்டாக இக்கால்பந்து போட்டி நடத்தப்படுகிறது.

முதலாம் ஆண்டில் 12 அணிகள் பங்கேற்றன. இவ்வாண்டு 16 அணிகள் கலந்து கொண்டுள்ளன.

இதில் 15 அணிகள் உள்ளூர் அணிகளாகும். ஒரு அணி இந்தோனேசியாவில் இருந்து வந்துள்ளது.

இது தான் இப்போட்டிக்கு கிடைத்த மகத்தான வெற்றி என்று ஹஸ்மா கூறினார்.

முன்னதாக நாட்டின் முன்னாள் தேசிய, மாநில ஆட்டக்காரர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் இப்போட்டி நடத்தப்படுகிறது.

இதுபோன்ற போட்டிகள் தொடர்ச்சியாக நடத்தப்படும் என்று கிளப்பின் துணைத் தலைவர் லத்திவ் கூறினார்.

இப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 8 ஆயிரம் ரிங்கிட் பரிசாக வழங்கப்படவுள்ளது.

இரண்டாவது இடத்திற்கு 4000, மூன்றாவது இடத்திற்கு 2000, நான்காவது இடத்திற்கு 1000 ரிங்கிட்டும் பரிசாக வழங்கப்படவுள்ளது.

மேலும் பிளேட் சாம்பியனுக்கு 1000 ரிங்கிட் பரிசாக வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset