நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

16 ஆவது ஆண்டாக பேராக் தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான கால்பந்து போட்டி: கால்பந்து சங்கத்தின் தலைவர் டத்தோ அமாலுடின் இஸ்மாயில்

ஈப்போ: 

பேராக் இந்திய காற்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில், பேராக் மாநில அரசாங்க ஆதரவோடு பேராக் மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான கால்பந்து போட்டி 16 ஆவது ஆண்டாக நடைபெறவெள்ளதாக பேராக் இந்திய கால்பந்து சங்கத்தின் தலைவர் டத்தோ அமாலுடின் இஸ்மாயில் கூறினார்.

இப் போட்டி வரும் ஆகஸ்ட் 3 ம் தேதியில், காலை மணி 8.00 க்கு இங்குள்ள ஈப்போ பாடாங்கில் நடைபெறவுள்ளது. இம்முறை ஆண்கள் பிரிவில் 38 தமிழ்ப்பள்ளிகளும், பெண்கள் பிரிவில் 24 குழுக்களும் பங்கு பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

போட்டியை பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கவுள்ளார். அவருடன், மலேசிய சட்ட நீதித்துறை துணையமைச்சர் எம்.குலசேசரன் மற்றும் இதர பிரதான பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்துக்கொள்வார்கள் என்று அவர் சொன்னார்.

இறுதியில் வெற்றி பெறும் இரு குழுக்கள் பேரா மாநிலத்தை பிரதிநிதித்து தேசிய அளவில் நடைபெறும் மீபா கால்பந்து போட்டியில் பங்குபெறுவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவிலும் இரு குழுக்கள் தேசிய அளவில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாண்டில் வெற்றி பெறும் குழுவிற்கு வெற்றி கிண்ணம், பதக்கம், பண ரொக்கம், இதர பரிசுகள் வழங்கப்படவுள்ளது. அத்துடன், விளையாட்டாளர்களுக்கு காலையுணவு, மதிய உணவு, மினரல் நீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஆகவே, இப்போட்டியை காண பெற்றோர்கள் ,ஆசிரியர்கள், கால்பந்து இரசிகர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் கலந்துகொள்ள அன்போடு அழைக்கின்றனர் ஏற்பாட்டுக் குழுவினர்.

- ஆர். பாலச்சந்தர் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset