
செய்திகள் விளையாட்டு
மலேசியா கால்பந்து அணி மீண்டு(ம்) எழும் நஃபுசி நைன் நம்பிக்கை
கோலாலம்பூர்,
23 வயதிற்குட்பட்ட மலேசிய தேசிய கால்பந்து அணி, இந்த ஆண்டின் ஆசியான் வெற்றியாளர் கிண்ணத் தொடரில், பிலிப்பைன்ஸிடம் 2-0 என்ற கணக்கில் அடைந்த அதிர்ச்சியூட்டும் தோல்விக்கு பிறகு மீண்டும் எழ வேண்டும் என, தலைமை பயிற்சியாளர் நஃபுசி நைன் தனது வீரர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
மலேசியா, இந்த போட்டியின் எ குழுவில் இடம்பெற்று, போட்டியின் முதல் ஆட்டமாக பிலிப்பைன்ஸை எதிர்கொண்டது. ஆனால், 70% ஆட்டத்தை தம்வசம் வைத்திருந்த போதிலும், பிலிப்பைன்ஸின் வீரர் ஒட்டூ பிசொங் முதல் பாதியில் இரு கோல்களை அடித்ததால், மலேசியா முடிவில் தோல்வி கண்டது.
இந்த தோல்வி அணியின் மனநிலையில் தாக்கம் ஏற்படுத்தியிருந்தாலும், நஃபுசி அதனை ஒரு அனுபவமாகப் பார்க்க வேண்டும் எனக் கூறினார்.
"நாங்கள் நன்றாக விளையாடினோம். வாய்ப்புகள் ஏராளமாக இருந்தன. ஆனால், கோல் அடிக்க தவறிவிட்டோம். பிலிப்பைன்ஸ் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தியது. அதுவே வெற்றிக்கும் தோல்விக்கும் இடையிலான வித்தியாசமாக இருந்தது," என்று ஜகார்த்தாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
இப்போது, அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு பெற, மலேசியா கட்டாயமாக வெள்ளிக்கிழமை நடைபெறும் புரூணை மற்றும் அடுத்த வாரம் நடைபெறும் இந்தோனேசியா அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டும்.
"தற்காப்பு, தாக்குதல் ஆகிய பகுதிகளை சரி செய்ய வேண்டிய பிரிவுகள். புரூணைஆட்டம் மிகவும் முக்கியமானது. நாங்கள் வெற்றி பெற தேவையான அனைத்தையும் செய்வோம்," என நஃபுசி கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
July 17, 2025, 4:09 pm
மெர்டேகா கோப்பை மீண்டும் நடைபெற வாய்ப்பு
July 17, 2025, 3:29 pm
ஜப்பான் பொது பூப்பந்து போட்டி: தேசிய கலப்பு இரட்டையர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்
July 17, 2025, 10:58 am
கனடிய பொது டென்னில் போட்டியிலிருந்து அரினா சபாலென்கா விலகல்
July 16, 2025, 9:22 am
கிறிஸ்டியானோ ரொனால்டோவை விட யமால் சிறந்த வீரரா?
July 15, 2025, 7:00 pm
E.coli பாக்டீரியா பரவல் காரணமாக செந்தோசாவில் உலக நீர் விளையாட்டுப் போட்டி ஒத்திவைப்பு
July 14, 2025, 12:28 pm
SCORE Marathon 2025 சாம்பியன் பட்டம் வென்றார் சிவனேஸ்வரன்
July 14, 2025, 8:05 am
ஜேடன் சாஞ்சோவை அணியில் இணைக்கும் முயற்சியில் ஜூவாந்தஸ்
July 14, 2025, 7:30 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: செல்சி சாம்பியன்
July 13, 2025, 11:26 am