நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

SCORE Marathon 2025 சாம்பியன் பட்டம் வென்றார் சிவனேஸ்வரன்

புத்ராஜெயா:
மலேசிய நெடுதூர ஓட்டக்காரரான ஜி. சிவனேஸ்வரன், முதல் முறையாக 42 கிலோமீட்டர் முழு மரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றதோடு சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்துள்ளார்.

நேற்று அதிகாலை நடந்த SCORE Marathon 2025இல், அவர் போட்டியை முடிக்க 2 மணி 48 நிமிடம் 8 விநாடிகள் (2:48:08) எடுத்துக் கொண்டார். உலகளவிலான போட்டியாளர்களையும் தோற்கடித்து  சாம்பியனாக வாகை சூடினார்.

"நான் வெற்றி பெறுவேன் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவே இல்லை. குறிப்பிட்ட நேரத்தை கடந்துவிட்டேன், மேலும் சாம்பியன் பட்டத்தையும் வென்றுவிட்டேன். நான்கு மாத கால பயிற்சி வீண் போகவில்லை," என்று தமது மகிழ்ச்சியை  சிவனேஸ்வரன் வெளிப்படுத்தினார்.

இவர் ஏற்கனவே 2018-ல் ASEAN பல்கலைக்கழக விளையாட்டுகளில் 10,000 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த ஆண்டுக்கான SCORE Marathon போட்டியில், மொத்தம் 48 நாடுகளைச் சேர்ந்த 33,000 பேர் பங்கேற்றுள்ளனர்.
21 கிமீ ஓட்டப்போட்டி-யில் தான் அதிகமானோர் கலந்து கொண்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset