நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஜேடன் சாஞ்சோவை அணியில் இணைக்கும் முயற்சியில் ஜூவாந்தஸ்

ரோம்:

ஜேடன் சாஞ்சோவை அணியில் இணைக்கும் முயற்சியில் ஜூவாந்தஸ் கிளப் ஈடுபட்டுள்ளது.

ஜூவாந்தஸ், மென்செஸ்டர் யுனைடெட் இடையே தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் நடந்தன.

இதன் அடிப்படையில் ஜேடன் சாஞ்சோ தொடர்பில் இரு கிளப்புகளும் கொள்கையளவில் ஒரு ஒப்பந்தத்தைக் கொண்டுள்ளன.

இங்கிலாந்து வீரரான அவர் ஜூவாந்தஸ் அணியுடன்  நான்கு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புக்கொண்டுள்ளார்.

அவருக்கு ஒரு பருவத்திற்கு 5 மில்லியன் யூரோக்களுக்கு மேல் சம்பளம் வழங்கப்படவுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் கூடுதலாக ஒரு வருடம், 1.5 மில்லியன் யூரோக்கள் வரை போனஸ் பெறுவதற்கான விருப்பமும் அடங்கும்.

அப்படி என்றால் ஜேடன் சாஞ்சோவை ஜூவாந்தஸ் அணியில் சேர சம்பளக் குறைப்பை ஏற்றுக் கொண்டார்.

ஆனால் ஜூவாந்தஸ் அணிக்கும் மென்செஸ்டர் யுனைடெட் அணிக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset