
செய்திகள் தமிழ் தொடர்புகள்
அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும்: அமீத் ஷா கருத்தை மறுத்து இபிஎஸ்
சென்னை:
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், சேலம், நெடுஞ்சாலை நகரில் அதிமுக மாநகர் மாவட்ட கட்சி அலுவலகம் திறப்பு விழாவில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:
”அதிமுக கூட்டணி ஒற்றுமையாக வலுவாக இருக்கின்றது. வருகின்ற 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும்.
திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று அனைத்து மக்களும் முடிவெடுத்துவிட்டனர். மக்களுடைய எழுச்சியைப் பார்க்கும்போது இந்த ஆட்சியில் அவர்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை.
நான்கு ஆண்டுகாலம் மக்களைப் பற்றி சிந்திக்காமல், தேர்தலுக்காக உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தை ஊர் ஊராக கொண்டு செல்கின்றனர். அவர்களிடன் செல்போன் எண்ணை வாங்கி அதை திமுக ஐடி அணியிடம் கொடுக்கிறார்கள்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கின்றன, பல கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது, அதிமுக கூட்டணி பலம் வாய்ந்த வெற்றி கூட்டணியாக அமையும்.
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து துறைகளிலும் திமுக செய்த ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தப்படும்.” எனத் தெரிவித்தார்.
கடந்த வாரம், 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கு அளித்த விரிவான நேர்காணலில் அதிமுக - பாஜக கூட்டணி குறித்துப் பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும். ஆட்சியில் பாஜக பங்கு பெறும்' என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 30, 2025, 11:06 am
தமிழகத்தில் செப். 4-ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு
August 30, 2025, 12:49 am
சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி நொறுங்கி விழுந்தது
August 27, 2025, 5:56 pm
பண்டிகைக்காக 3 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்: சென்னையை அலங்கரித்த விதவிதமான விநாயகர்
August 27, 2025, 4:26 pm
தவெக தலைவர் விஜய் மீதும் அவரது பவுன்சர்கள் மீதும் 10 பேர் மீதும் வழக்குப் பதிவு
August 26, 2025, 2:08 pm
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பூக்களின் விலை 3 மடங்காக உயர்வு
August 25, 2025, 1:27 pm
‘இந்தியா’ கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு
August 24, 2025, 9:58 pm
இபிஎஸ் கீழ்ப்பாக்கம் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது: பெங்களூரு புகழேந்தி
August 24, 2025, 6:47 pm