நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இன்று முதல் சிங்கப்பூரிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு பறக்கலாம் 

சிங்கப்பூர்:

சிங்கப்பூரிலிருந்து, இன்று முதல், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் ஆஸ்திரேலியா செல்லலாம். அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை என்று சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.

சிங்கப்பூர்க் குடியிருப்பாளர்களை ஆஸ்திரேலியாவுக்கு ஈர்க்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக அது அமைகிறது.

நியூ சவுத் வேல்ஸ் (New South Wales), விக்டோரியா (Victoria) ஆகிய மாநிலங்கள், நாட்டின் தலைநகர், அதை ஒட்டிய பகுதிகள் ஆகியவை அந்தச் சிறப்புப் பயண ஏற்பாட்டுத் திட்டத்தின்  கீழ் வருகின்றன.

In a glass clearly: Singapore and Australia compared

ஆஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு முன்னர், சிங்கப்பூர்ப் பயணிகள் கிருமித்தொற்றுப் பரிசோதனைகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.

இத்தாலியில் நடைபெற்ற G20 உச்சநிலைச் சந்திப்பின்போது, இரு நாட்டுப் பிரதமர்களும் சிறப்புப் பயண ஏற்பாடு குறித்த முடிவை உறுதி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset