நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

29 ரஷ்ய நிறுவனங்கள் மீது ஜப்பான் பொருளாதாரத் தடை விதித்துள்ளது

தோக்கியோ:

உக்ரைனுக்கு தனது ஆதரவை காட்டும் வகையில் ரஷ்யாவைச் சேர்ந்த 11 தனிநபர்கள், 29 நிறுவனங்கள் மற்றும் 3 வங்கிகள் மீது ஜப்பான் பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

மேலும்வ் தொழில்நுட்பம் மற்றும் எந்திர உற்பத்தி உள்ளிட்ட ரஷ்ய ராணுவம் சார்ந்த 22 தொழிற்சாலைகளுக்கு ஏற்றுமதி தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதனைத் தொடர்ந்து ரஷ்யாவுக்கு ஏற்றுமதி தடை உள்ள 335 பொருட்களின் பட்டியலுக்கும் ஜப்பான் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நேட்டோ கூட்டணியில் இணைய முயன்ற உக்ரைன் மீது ரஷ்யா 2023-ஆம் ஆண்டு போர் தொடுத்தது.

இதில் அமெரிக்கா, பல ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றன.

எனவே உக்ரைனுக்கு ஆயுதம், பொருளாதார உதவிகளை அந்த நாடுகள் வழங்குகின்றன.

அதேபோல் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளும் விதிக்கப்படுகிறது.

தற்போது ஜப்பானும் இதனால் பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset