செய்திகள் உலகம்
உலகின் தலைசிறந்த பாஸ்போர்ட்டுகள் வரிசையில் சிங்கப்பூர் முதலிடம்; மலேசியாவுக்கு 12 ஆவது இடம்: இந்தியா 85ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது
லண்டன்:
இங்கிலாந்தைச் சேர்ந்த ஹென்லே பாஸ்போர்ட் இண்டெக்ஸ் எனும் நிறுவனம் தற்போது 2025ஆம் ஆண்டில் உலக நாடுகளின் பாஸ்போர்டுகளின் மதிப்பு பட்டியல் வெளியிட்டுள்ளது.
ஒரு நாட்டின் குடிமக்கள் வைத்திருக்கும் கடவுச்சீட்டின் மூலம் எத்தனை சர்வதேச நாடுகளுக்கு விசா இன்றி பயணம் மேற்கொள்ள முடியும் என்பதை வைத்து கடவுச்சீட்டுகளின் மதிப்பு கணக்கிடப்படுகிறது. இது சாதாரண குடிமக்கள் சர்வேதேச அளவில் பயணம் செய்வதை எளிதாகுகிறது.
முதல் இடத்தில் சிங்கப்பூரின் பாஸ்போர்ட் இடம் பிடித்துள்ளது.
195 உலக நாடுகளுக்கு விசா இல்லாமல் சிங்கப்பூரின் குடிமக்களால் பயணம் செய்யக்கூடிய சிறப்பை அந்த பாஸ்போர்ட் பெற்றுள்ளது.
அதற்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தில் ஜப்பான் நாட்டு பாஸ்போர்ட் உள்ளது. மூன்றாவது இடத்தை Finland, France, Germany, Italy, South Korea, Spain ஆகிய நாடுகள் பகிர்ந்துள்ளன.
மலேசியா 12ஆவது இடத்தை பிடித்துள்ளது. மலேசியா பாஸ்போர்ட்டை கொண்டு 183 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும்.
இந்தியாவின் பாஸ்போர்ட் கடந்த 2021ஆம் ஆண்டு 90 வது இடத்தில் இருந்தது. அது 2024 இல் 80வது இடத்திற்கு முன்னேறியிருந்தது. இந்நிலையில், தற்போது 85 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் குடிமக்களின் மூலம் 57 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. சிங்கப்பூர் (195 இடங்கள்)
2. ஜப்பான் (193 இடங்கள்)
3. பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், பின்லாந்து, தென் கொரியா (192 இடங்கள்)
4. ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து, லக்சம்பர்க், நெதர்லாந்து, சுவீடன், நார்வே (191 இடங்கள்)
5. பெல்ஜியம், நியூசிலாந்து, போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து, யுனைடெட் கிங்டம் (190 இடங்கள்)
6. கிரீஸ், ஆஸ்திரேலியா (189 இடங்கள்)
7. கனடா, போலந்து, மால்டா (188 இடங்கள்)
8. ஹங்கேரி, செக்கியா (187 இடங்கள்)
9. எஸ்டோனியா, அமெரிக்கா (186 இடங்கள்)
10. லிதுவேனியா, லாட்வியா, ஸ்லோவேனியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (185 இடங்கள்)
11. Croatia, Iceland Slovakia (185 இடங்கள்)
12. மலேசியா 12ஆவது இடத்தை பிடித்துள்ளது. மலேசியா பாஸ்போர்ட்டை கொண்டு 183 நாடுகளுக்கு பயணிக்க முடியும்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
January 14, 2025, 2:19 pm
இயற்கைக்கு நன்றி சொல்லும் நேரம்: சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்
January 13, 2025, 5:43 pm
ஹஜ் யாத்திரை -2025: இலங்கை, சவூதி நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் கையொப்பமானது
January 13, 2025, 11:21 am
முதல் விண்வெளி பயணத்திற்குத் தயாராகும் New Glenn உந்துகணை
January 13, 2025, 10:58 am
எங்கு பார்த்தாலும் சாம்பல்: லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீயில் 16 பேர் மரணம்
January 13, 2025, 10:18 am
கனடா பிரதமர் போட்டியிலிருந்து அனிதா ஆனந்த் விலகல்
January 12, 2025, 8:28 pm
இலங்கையில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கான வாய்ப்பு
January 12, 2025, 12:33 pm
விபத்துக்குள்ளான தென் கொரிய விமானத்தின் கருப்பு பெட்டி கடைசி நான்கு நிமிடங்கள் செயல்படவில்லை
January 12, 2025, 11:04 am
29 ரஷ்ய நிறுவனங்கள் மீது ஜப்பான் பொருளாதாரத் தடை விதித்துள்ளது
January 12, 2025, 11:02 am