நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இலங்கையில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கான வாய்ப்பு 

கொழும்பு:

இலங்கையில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

வடமேல் மாகாணத்திலும் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களிலும் கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மில்லிமீட்டர் வரையில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இடியுடன் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது,

- நிஹார் தய்யூப் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset