நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

KENTUCKY தேவாலயத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல்: சந்தேக நபர் உட்பட மூவர் பலி 

கெந்தாக்கி: 

ஆயுதம் ஏந்திய ஓர் ஆடவன் மேற்கொண்ட துப்பாக்கி சூடு தாக்குதலில் கெந்தாக்கியில் உள்ள தேவாலயத்தில் இருந்த இரு பெண்மணிகளையும் சுட்டு கொன்ற நிலையில் ஒரு போலீஸ் அதிகாரியையும் தாக்கினான். 

இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அமெரிக்காவின் கெந்தாக்கி மாகாணத்தின் BAPTIST RICHMOND ROAD தேவாலயத்தில் நேற்று நிகழ்ந்தது. 

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் இரு ஆடவர்கள் தாக்குதலுக்கு இலக்கான வேளையில் அதில் ஒருவர் கடுமையான காயங்களுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வருகிறார் என்று LEXINGTON போலீஸ் தலைவர் கூறினார். 

போலீசாருக்கும் ஆயுதமேந்திய ஆடவருக்கும் ஏற்பட்ட கடுமையான தாக்குதலில் சந்தேக நபர் பலியானார். 

விமான நிலையத்திலிருந்து காரை ஒன்று பறிமுதல் செய்து கொண்டு தேவாலயத்தில் பொதுமக்களை நோக்கி இந்த துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset