
செய்திகள் தமிழ் தொடர்புகள்
சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஜூலை 16, 17-ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை:
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் வரும் 16, 17-ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்றும் (ஜூலை 14), நாளையும் ஓரிரு இடங்களிலும், 16-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் நாளை நீலகிரி, கோவை மாவட்டங்களிலும், வரும் 16, 17-ஆம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்கள், கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 18, 19-ம் தேதிகளில் நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை, வழக்கத்தைவிட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்கக்கூடும்.
சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 80 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கும்.
தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் ஆகிய பகுதிகளில் இன்று முதல் வரும் 16-ஆம் தேதி வரை மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.
எனவே, இப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு வானிலை ஆய்வு மையத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 30, 2025, 11:06 am
தமிழகத்தில் செப். 4-ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு
August 30, 2025, 12:49 am
சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி நொறுங்கி விழுந்தது
August 27, 2025, 5:56 pm
பண்டிகைக்காக 3 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்: சென்னையை அலங்கரித்த விதவிதமான விநாயகர்
August 27, 2025, 4:26 pm
தவெக தலைவர் விஜய் மீதும் அவரது பவுன்சர்கள் மீதும் 10 பேர் மீதும் வழக்குப் பதிவு
August 26, 2025, 2:08 pm
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பூக்களின் விலை 3 மடங்காக உயர்வு
August 25, 2025, 1:27 pm
‘இந்தியா’ கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு
August 24, 2025, 9:58 pm
இபிஎஸ் கீழ்ப்பாக்கம் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது: பெங்களூரு புகழேந்தி
August 24, 2025, 6:47 pm