நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

வடிவேலு சார் எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்தார்: ஷில்பா ஷெட்டி புகழாரம் 

கோடம்பாக்கம்: 

சாண்டில்வுட் இயக்குநர் ப்ரேம் இயக்கத்தில் துருவா சார்ஜா, சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் 'கே.டி. தி டெவில்'.

'ஜனநாயகன்' படத்தை தயாரிக்கும் கே.வி. என் தயாரிப்பு நிறுவனம்தான் இப்படத்தையும் தயாரிக்கிறது.

பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழ் டீசர் வெளியீட்டு விழா நேற்றைய தினம் சென்னை சத்யம் திரையரங்கத்தில் நடைபெற்றது.

அந்த நிகழ்வில் ஷில்பா ஷெட்டி பேசும்போது, " எனக்கு சென்னையில மசாலா தோசை ரொம்பவே பிடித்திருக்கிறது. எனக்கு தென்னிந்திய உணவுகள் எல்லாமே பிடிக்கும்.

எனக்கு சென்னையையும் இங்கு இருக்கும் மக்களையும் மிகவும் பிடிக்கும். " என்றவரிடம் தமிழ் திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்காததுப் பற்றி கேள்வி எழுப்பினர்.

அவர், "மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது வடிவேலு சார் எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்தார்.

பிறகு, தமிழில் விஜய்யுடன் நான் ஒரு பாடலுக்கு நடனமாடினேன். பிறகு தமிழ் சினிமாவிலிருந்து சிறந்த வாய்ப்புகள் எதுவும் எனக்கு வரவில்லை.

ஆனால், தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு எனக்கு பிடிக்கும். இந்த 'கே.டி' திரைப்படத்தில் எமோஷனும் இருக்கிறது. இப் படத்திற்காக நிறைய உழைத்திருக்கிறோம்.

படத்தைக் கண்டிப்பாகத் தமிழ் ரசிகர்களும் ரசிப்பார்கள், இது அழகான மாஸ் ஆக்ஷன் படம். " எனப் பேசினார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset