நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

K.H. குழுமத் தலைவர் முஹம்மது ஹாஷிம் சாஹிப் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: 

சர்வதேச புகழ்பெற்ற K.H. குழுமத் தலைவரும் தென்னிந்திய தோல் பதனிடுவோர், முகவர்கள் பேரவையின் புரவலருமான ஜனாப் ஹாஜி மலாக் முஹம்மது ஹாஷிம் சாஹிப் அவர்களின் மறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி; K.H. குழுமத் தலைவரும் தென்னிந்திய தோல் பதனிடுவோர் மற்றும் முகவர்கள் பேரவையின் புரவலருமான ஜனாப் ஹாஜி மலாக் முஹம்மது ஹாஷிம் சாஹிப் அவர்கள் மறைந்த செய்தியறிந்து வருத்தமுற்றேன்.

வேலூர் மாவட்டத்தில் விஷாரம், இராணிப்பேட்டை பகுதியில் தோல் பதனிடும் தொழில்துறையின் பிதாமகராக விளங்கி, பல பேருக்கு வேலைவாய்ப்பளித்து, இஸ்லாமிய மக்களிடையே பெரும் மரியாதை பெற்றுத் திகழ்ந்தவர் முஹம்மது ஹாஷிம் சாகிபு அவர்கள்.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் மேல்விஷாரம் பகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset