நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இஸ்ரேல் மீது ஈரான் அதிபயங்கர தாக்குதல்: கொத்து குண்டுகளை வீசியதால் பெரும் சேதம்

டெல் அவிவ்: 

இஸ்​ரேல் - ஈரான் போர் நேற்று 8-ஆவது நாளாக நீடித்த நிலை​யில், இஸ்​ரேல் மீது ஈரான் கொத்து குண்​டு​களை வீசி அதிப​யங்கர தாக்​குதலை நடத்தியது. இதனால், தலைநகர் டெல்​அ​விவ் உட்பட பல்​வேறு நகரங்​களில் பிரம்​மாண்ட கட்​டிடங்​கள் சேதமடைந்​தன. பல அடுக்கு மாடி வழக்கங்கள் தரைமட்டமாகின.

இந்​நிலை​யில், இஸ்​ரேலின் மத்​திய பகு​தி​களில் மக்​கள் அதி​கம் வசிக்​கும் இடங்​களை குறி​வைத்து ஈரான் கடந்த 20-ஆம் தேதி கிளஸ்​டர் குண்​டு​களை வீசி​ய​தாக, அமெரிக்​கா​வில் உள்ள இஸ்​ரேல் தூதரகம் தெரி​வித்​தது. 

சுமார் 8 கி.மீ. சுற்​றளவு வரை கடும் சேதத்தை ஏற்​படுத்​தக்​கூடிய கொத்து குண்​டு​களை இஸ்​ரேல் மீது ஈரான் பயன்​படுத்​து​வது இதுவே முதல் முறை. ஈரான் வீசிய கொத்து குண்​டு​களால், இஸ்​ரேல் தலைநகர் டெல்​அ​விவ் உட்பட பல்​வேறு பகு​தி​களில் பிரம்​மாண்ட கட்​டிடங்​கள் சரிந்து கிடப்​ப​தாக தகவல்​கள் தெரிவிக்​கின்​றன. இஸ்​ரேலின் துறை​முக நகர​மான ஹைபா, டான் மாவட்​டங்​கள் உட்பட பல பகு​தி​கள் மீது ஈரான் நேற்று சரமாரி​யாக ஏவு​கணை​களை வீசி​யது.

Israeli military issues evacuation warning – as it happened | Iran | The  Guardian

மைக்ரோசாஃப்ட் அலுவலகம் சேதம்: 

சைரன் ஒலி எழுப்​பியதும் மக்​கள் பதுங்கு குழிகளி​லும், வணிக வளாகங்​களின் கார் பார்க்​கிங் பகு​தி​களி​லும் சென்று பதுங்​கினர். ஈரான் வீசிய ஏவு​கணை​கள் பலகட்​டிடங்​கள் மீது விழுந்து வெடித்​தன. 

பீர் சேவா நகரில் உள்ள மைக்​ரோ​சாஃப்ட் அலு​வலக கட்​டிடம் மீது ஈரான் ஏவு​கணை விழுந்து வெடித்​த​தில், பலர் காயம் அடைந்​தனர். இரு நாடு​கள் இடையே பதற்​றத்தை தணிக்​கும் வித​மாக, ஜெனி​வா​வில் நடை​பெறும் பேச்​சு​வார்த்​தைக்கு வரு​மாறு ஈரான் வெளி​யுறவு துறை அமைச்​சர் அப்​பாஸ் அராகசிக்கு ஐரோப்​பிய நாடு​களின் அதி​காரி​கள் அழைப்பு விடுத்​துள்​ளனர். 

இரு நாடு​களும் கட்​டுப்​பாட்​டுடன் நடந்து கொள்​ளு​மாறு பிரான்​ஸ், ஜெர்​மனி, இங்​கிலாந்து ஆகிய நாடு​களின் அமைச்​சர்​கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset