நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஜூலை மாதத்தில் சிங்கப்பூரில் மின்சாரக் கட்டணம் குறைகிறது 

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் இவ்வாண்டு ஜூலை-செப்டம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் வீடுகளுக்கான மின்சார, எரிவாயுக் கட்டணம் குறைகிறது.

மின்சாரக் கட்டணம் ஒரு கிலோவாட்மணிக்கு 65 காசு குறையும். அதேவேளை, எரிவாயுக் கட்டணம் ஒரு கிலோவாட்மணிக்கு 44 காசு குறையும்.

எரிசக்தி, எரிபொருள் விலை குறைந்திருப்பதால் மின்சார, எரிவாயுக் கட்டணம் குறைந்துள்ளது.

சென்ற காலாண்டிலிருந்து மின்சார வரி 2.3 விழுக்காடு குறைந்திருப்பதாக தேசிய மின்சார விநியோக அமைப்பான எஸ்பி குழுமம் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து கட்டணக் குறைவு குறித்த அறிவிப்பு வந்துள்ளது.

அதன்படி எடுத்துக்காட்டாக, மின்சாரக் கட்டணம் குறைவதையடுத்து சராசரியாக ஒரு நாலறை வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் வசிப்போரின் மாதாந்தர மின்சாரக் கட்டணம் பொருள், சேவை வரி தவிர்த்து, 2.36 வெள்ளி குறையலாம்.

அதேபோல், ஒரு கிலோவாட்டுக்கான எரிவாயுக் கட்டணம் 22.72 காசிலிருந்து 22.28 காசுக்குக் குறையும் என்று எரிவாயு உற்பத்தி, விநியோக நிறுவனமான சிட்டி கேஸ்வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டது. முந்திய காலாண்டுடன் ஒப்பிடுகையில் எரிபொருள் விலை குறைந்திருப்பதே அதற்குக் காரணம்.

எஸ்பி குழுமம், சிட்டி எனர்ஜி இரண்டும் ஒவ்வொரு காலாண்டும் மின்சார, எரிவாயுக் கட்டணங்களை மறுபரிசீலனை செய்யும். எரிசக்திச் சந்தை ஆணையத்தின் வழிமுறைகளுக்கு ஏற்ப அவ்விரு அமைப்புகளும் கட்டணங்களை மறுபரிசீலனை செய்யும்.

உலகளவில் எரிபொருள் விலையில் அடிக்கடி ஏற்படக்கூடிய மாற்றங்களால் மின்சார, எரிவாயுக் கட்டணம் ஒவ்வொரு காலாண்டும் மாறுபடக்கூடும். தற்போது மத்தியக் கிழக்கு வட்டாரத்தில் தொடரும் பூசல்கள் போன்ற உலக நாடுகளுக்கிடையிலான அரசியல் நிலவரம் எரிபொருள் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

- ரோஷித் அலி 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset