
செய்திகள் உலகம்
அமெரிக்காவுக்கு ரஷ்ய அதிபர் புதின் பகிரங்க எச்சரிக்கை
வாஷிங்டன்:
ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. அணு ஆயுதங்களைத் தயாரிக்க இறுதிக் கட்டத்தில் ஈரான் உள்ளதாக கூறி இஸ்ரேல் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
பதிலுக்கு ஈரானும் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையி்ல ஈரான சரண் அடைய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்தார். ஆனால் சரண் அடையும் பேச்சுக்கே இடமில்லை என்று ஈரான் மதத் தலைவர் அயதுல்லா கமேனி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். அமெரிக்கா போரில் களமிறங்கினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.
இந்நிலையில், ஈரான் மீது தாக்குதலை இரண்டு வாரங்களில் முடிவு செய்யப்படும் என்று டிரம்ப் அறிவித்தார்.
இந்நிலையில், ரஷ்ய வெளியுறவுத் துறைதுணை அமைச்சர் செர்ஜி ரயாப்கோவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா போர்தொடுத்தால் மிக கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறுகையில், ஈரான், இஸ்ரேல் இடையே போர்நிறுத்தத்தை ஏற்படுத்த சமரச பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 3:55 pm
வெளிநாடுகளுக்கான நிதி உதவிகள் நிறுத்தம்: 14 மில்லியன் பேர் மரணிக்க கூடும்
July 1, 2025, 3:40 pm
தாய்லாந்து பிரதமர் பதவியிலிருந்து பேதொங்தார்ன் ஷினவாத்ரா தற்காலிகமாக நீக்கப்பட்டார்
July 1, 2025, 3:22 pm
வரி மசோதா நிறைவேற்றப்பட்டால் புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவேன்: எலான் மஸ்க் உறுதி
July 1, 2025, 10:49 am
ஜூலை மாதத்தில் சிங்கப்பூரில் மின்சாரக் கட்டணம் குறைகிறது
June 29, 2025, 5:14 pm
சிங்கப்பூரில் இனி முதல்முறை ரத்த தானம் செய்வோர் வயது வரம்பு 60இலிருந்து 65க்கு உயர்கிறது
June 28, 2025, 1:47 pm
கடற்படை தளபதி, அணுசக்தி விஞ்ஞானி பதவி பறிப்பு
June 28, 2025, 11:06 am