நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இணையத்தின் மூலம் எதிரிகள் நம்மை கண்காணிக்கிறார்கள்; எனவே இணைய சேவை முடக்கப்பட்டுள்ளதாக ஈரான் மக்களுக்கு அறிவிப்பு

டெஹ்ரான்:

ஈரானில் கடந்த 12 மணி நேரமாக இணைய சேவை பரவலாக முடங்கியுள்ளது. லண்டனை தலைமையிடமாகக் கொண்ட சைபர் பாதுகாப்பு அமைப்பு நெட்ப்ளாக்ஸ் இத் தகவலை உறுதிப்படுத்தி உள்ளது. 

இணைய சேவை முடங்கியுள்ளதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியிருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆனால், ஈரான் தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களின் நலன் கருதியே இணைய சேவையில் சில கெடுபிடிகளைக் கையாள்கிறோம். இணைய சேவை இருந்தால் அதன் மூலம் எதிரிகள் இலக்குகளை கண்டறிந்து தாக்குதல் நடத்துகின்றனர். 

அதனால், அப்பாவி மக்களின் சொத்துகள் சேதமாகிறது, உயிரிழப்புகள் ஏற்படுகிறது. 

எனவே, இணைய சேவையில் கெடுபிடி கடைப்பிடிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset