நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தாய்லாந்து பிரதமரின் தொலைபேசி அழைப்பு கசிவால் ஆட்சி மாற்றமா?

பேங்காக்:

தாய்லாந்து பிரதமர் பேதொங்தார்ன் ஷினவாத்ரா கம்போடியாவின் முன்னாள் தலைவர் ஹுன் சென்னுடனான தொலைபேசி அழைப்பு கசிந்ததற்குத் மன்னிப்புக் கோரியுள்ளார். 

தொலைபேசி அழைப்பு கசிந்ததால் தாய்லந்தில் மீண்டும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, பேதொங்தார்ன் பதவி விலக வேண்டும் என்று அழைப்புகள் எழுந்துள்ளன.

அவரது அரசாங்கக் கூட்டணியைச் சேர்ந்த முக்கிய கட்சியான பூமிஜைதாய் கூட்டணியிலிருந்து விலகியுள்ளது.

பேதொங்தார்னின் செயல் நாட்டையும் ராணுவத்தின் கண்ணியத்தையும் பாதித்திருப்பதாக பூமிஜைதாய் கட்சி தெரிவித்துள்ளது. 

கசிந்த தொலைபேசி அழைப்பில் பேதொங்தார்ன் ஹுன் சென்னுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பூசல் பற்றிப் கலந்துரையாடினார்.

ஹுன் சென்னை அவர் "uncle" என்று அழைத்ததோடு தாய்லாந்து இராணுவத் தலைவரைத் தமது எதிரியாகக் குறிப்பிட்டார்.

பூமிஜைதாய் கட்சியைச் சேர்ந்த 69 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டதால் தாய்லந்தில் மீண்டும் தேர்தல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset