
செய்திகள் உலகம்
இஸ்ரேல் மீது ஏவப்படும் புத்தம்புது செஜ்ஜில் ஏவுகணை
தெஹ்ரான்:
இஸ்ரேல் - ஈரான் இடையே தொடங்கியிருக்கும் மிக பயங்கர சண்டையில், தனது மிக நீண்டத் தொலைவு இலக்குகளைத் தாக்கி அழிக்கும் திறன்படைத்த செஜ்ஜில் ஏவுகணையைக் கொண்டு தாக்குதல் நடத்த இருப்பதை தெஹ்ரான் உறுதி செய்திருக்கிறது.
இஸ்லாமிய புரட்சிகர காவல்படையான ஐஆர்ஜிசி, இதுவரை பயன்படுத்தவே பயன்படுத்தாத, மிக நீண்ட தொலைவில் இருக்கும் இலக்குகளை அழிக்கப் பயன்படுதம் செஜ்ஜில் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவுவதற்குத் தயாராகி வருகிறது.
இரண்டு நிலைகளைக் கொண்ட செஜ்ஜில் ஏவுகணையில், திட எரிபொருள் நிரப்பப்படுகிறது. தரையில் இருந்து தரையில் இருக்கும் இலக்குகளைக் குறிவைத்துத் தாக்கும் வகையில், ஈரானில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம், இஸ்ரேலின் எந்த வொருப் பகுதியையும் குறிவைத்து ஈரானால் தாக்க முடியும். அது மட்டுமல்லாமல் தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் கூட ஈரானால் தாக்க முடியும் என்று கூறப்படுகிறது.
ஈரான் தயாரித்த இந்த ஏவுகணை சுமார் 2,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கையும் துல்லியமாகத் தாக்கி அழிக்க வல்லது என்றும், அதிவேகமாக இலக்கை அடையும் என்றும் கூறப்படுகிறது.
இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு சவாலாக இருக்கும் என்றும், அதிவேகம் காரணமாக, இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்புகளால், செஜ்ஜில் ஏவுகணையைத் தடுக்க முடியாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 9:54 pm
சிந்து நதி நீரைப் பெற சர்வதேச அமைப்புகளிடம் முறையீடு: பாகிஸ்தான்
July 1, 2025, 3:55 pm
வெளிநாடுகளுக்கான நிதி உதவிகள் நிறுத்தம்: 14 மில்லியன் பேர் மரணிக்க கூடும்
July 1, 2025, 3:40 pm
தாய்லாந்து பிரதமர் பதவியிலிருந்து பேதொங்தார்ன் ஷினவாத்ரா தற்காலிகமாக நீக்கப்பட்டார்
July 1, 2025, 3:22 pm
வரி மசோதா நிறைவேற்றப்பட்டால் புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவேன்: எலான் மஸ்க் உறுதி
July 1, 2025, 10:49 am
ஜூலை மாதத்தில் சிங்கப்பூரில் மின்சாரக் கட்டணம் குறைகிறது
June 29, 2025, 5:14 pm
சிங்கப்பூரில் இனி முதல்முறை ரத்த தானம் செய்வோர் வயது வரம்பு 60இலிருந்து 65க்கு உயர்கிறது
June 28, 2025, 1:47 pm