செய்திகள் மலேசியா
எரிபொருள் குழாயில் கோளாறு: 87,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை ஹோண்டா நிறுவனம் திரும்ப பெறவுள்ளது
கோலாலம்பூர்:
எரிபொருள் குழாயில் கோளாறு ஏற்பட்டுள்ள நிலையில் 87,000-க்கும் மேற்பட்ட வாகனங்களை ஹோண்டா மலேசியா நிறுவனம் திரும்ப பெறவுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எரிபொருள் குழாய்யை மாற்றுவதற்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
Accord (model tahun: 2013 – 2017), BR-V (2017 – 2018), City (2014 – 2019), City (Hybrid) (2018, 2019), Civic (2017, 2018), CR-V (2018 – 2020), HR-V (2015 – 2018), Jazz (2015 – 2020), Jazz (Hybrid) (2018) dan Odyssey (2017 – 2019) ஆகிய ஹோண்டா ரக கார்களில் எரிபொருள் குழாயில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கோளாறு ஏற்பட்டுள்ள அக்குழாயில் நீண்ட நேரம் எரிப்பொருள் இருக்கும் போது அக்குழாய் விரிவடைந்து வாகனத்தை இயக்குவதில் சிக்கலை எதிர்நோக்க கூடும்.
அதுமட்டுமல்லாமல், வாகனம் ஓட்டும்போது இயந்திரம் செயலிழந்து போகும் நிலையும் உருவாகலாம் என்று ஹோண்டா நிறுவனம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
Jazz, City, Civic, Accord, BR-V, HR-V, CR-V, Odyssey ஆகிய 84,073 ஹோண்டா ரக கார்கள் திரும்பப் பெறவுள்ளன.
மொத்தம் 3,417 Civic, CR-V ரக கார்கள் உயர் அழுத்த எரிபொருள் குழாய் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளன.
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கார்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு கடிதங்கள் அனுப்பப்படும் என்று என்று ஹோண்டா தெரிவித்துள்ளது,
வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனம் ஹோண்டா டச் செயலி மூலம் திரும்பப் பெறுதலில் ஈடுபட்டுள்ளதா என்பதையும் சரி பார்க்கலாம்.
எனவே, பாதிக்கப்பட்ட அனைத்து வாடிக்கையாளர்களும், எரிபொருள் குழாயை மாற்றுவதற்கான அறிவிப்பு கிடைத்தவுடன் ஹொண்டா வாகன சேவை மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
இதற்கான முழு செலவையும் ஹோண்டா நிறுவனம் ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 30, 2026, 10:05 am
மானிய விலையில் டீசல் கிடைக்காததால் மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளோம்: ரோரோ லோரி உரிமையாளர்கள் குமுறல்
April 30, 2026, 9:43 am
சிலாங்கூரில் கடும் வறுமை பிரச்சினை ஒழிக்கப்பட்டுள்ளது: பிரதமர் அன்வார்
April 30, 2026, 9:36 am
மலைப்பாதையில் விபரீதம்; பேருந்து சக்கரத்தில் சிக்கிய மாணவன்
April 29, 2026, 8:11 pm
நாளை முதல் ரோன் 97 பெட்ரோல் 5 சென்னும் ரோன் 95 பெட்ரோல் 10 சென்னும் உயரும்: நிதியமைச்சு
April 29, 2026, 8:09 pm
அங்கீகரிக்கப்படாத வழிபாட்டுத் தலங்கள் விவகாரம் முழுமையாக ஆய்வு, கணக்கெடுப்புகள் தேவை: குணராஜ்
April 29, 2026, 8:07 pm
தேசிய முன்னணி, தேசியக் கூட்டணியுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை: அமினுடின்
April 29, 2026, 5:29 pm
வறட்சியின் பிடியில் கோலோக் ஆறு: கிளாந்தானில் நீர்மட்டம் அபாயகரமாகக் குறைவு
April 29, 2026, 5:19 pm
