நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி; ஜூலை 12ஆம் தேதி நடைபெறும்: பத்துமலை

கோலாலம்பூர்:

பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் சிலாங்கூர் - கூட்டரசுப் பிரதேச தமிழ்ப் பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி ஜூலை 12 ஆம் தேதி நடைபெறும்.

பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் தலைவர் பத்துமலை கூறினார்.

தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் இப் போட்டி நடத்தப்படுகிறது.

அவ் வகையில் 21ஆவது ஆண்டாக இப்போட்டி ஜூலை 12ஆம் தேதி சுங்கை பூலோ ஆர்ஆர்ஐ திடலில் நடைபெறுகிறது.

சிலாங்கூர் - கூட்டரசுப் பிரதேச  தமிழ்ப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மன்றம், சிலாங்கூர் கால்பந்து சங்கத்தின் ஆதரவில் இந்த போட்டி நடத்தப்படுகிறது.

ஆண்கள் பிரிவில் வெற்றி பெறும் குழுவுக்கு நமச்சிவாயம் கிண்ணமும் பெண்கள் பிரிவில் வெற்றி பெறும் குழுவுக்கு ரவீந்திரன் கிண்ணமும் பரிசாக வழங்கப்படும்.

இந்த போட்டியில் பங்கேற்கும் குழுக்கள் வரும் ஜூன் மாதம் 6 ஆம் தேதிக்குள் பதிந்து கொள்ள வேண்டும்.

போட்டிக்கான குலுக்கல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பத்துமலை கூறினார்.

பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியின் தேதி அறிமுக விழா இன்று நடைபெற்றது.

சங்கத்தின் துணைத் தலைவர்கள் கென்னத் கண்ணா, குணசேகரன், செயலாளர் குணசேகரன், பொருளாளர் ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset