
செய்திகள் விளையாட்டு
8 ஆண்டுகள், 5 குழந்தைகள்: நீண்டநாள் காதலியைக் கரம்பிடிக்கிறார் ரொனால்டோ
ரியாத்:
கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது நீண்டநாள் காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸை கரம்பிடிக்கவுள்ளார்
போர்த்துகல் கால்பந்து ஜாம்பவானும், அல் நசர் அணியின் நட்சத்திரமுமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது நீண்டகால காதலியான ஜார்ஜினா ரோட்ரிகஸை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
ஜார்ஜினா மோதிரம் அணிந்த புகைப்படம் ஒன்றையும் சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.
40 வயதான ரொனால்டோவும் ஆர்ஜெண்டினா - ஸ்பெயின் மாடலான ஜார்ஜினா ரோட்ரிக்ஸும் 2016 ஆம் ஆண்டு கூச்சி (gucci) ஸ்டோரில் முதல்முதலாகச் சந்தித்ததில் இருந்து இருவரும் காதலித்து வருகின்றனர்.
மேலும், இவர்கள் இருவரும் கடந்த 8 ஆண்டுகளாகத் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகின்றனர்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ, 2010 ஆம் ஆண்டு முதல் முறையாக தந்தையானார்.
ஜூன் 17 அன்று கிறிஸ்டியானோ ஜூனியர் என்ற குழந்தை பிறந்தது.
14 வயதாகும் கிறிஸ்டியானோ ஜூனியர் தந்தையைப் போலவே கால்பந்து விளையாட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது அவர்களுக்கு 5 பிள்ளைகள் உள்ளனர்.
இந்த தருணத்தில்தான், ரொனால்டோ விலை உயர்ந்த வைர மோதிரத்தை பரிசாக வழங்கி தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டிருக்கிறார்.
அதன்படி, இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருக்கின்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 15, 2025, 10:31 am
ஜேடன் சான்கோவை வாங்க ஏஎஸ் ரோமா முயற்சி
August 15, 2025, 10:30 am
ரியல்மாட்ரிட்டின் புதிய ஒப்பந்தம்; மெஸ்ஸி உலகின் சிறந்த வீரர்: மஸ்டாண்டுவோனோ
August 14, 2025, 10:38 am
தந்தை மெஸ்ஸியின் கோல் பாணியை பின்பற்றும் அவரது மகன்
August 14, 2025, 10:26 am
ஐரோப்பா சூப்பர் கிண்ணம்: பிஎஸ்ஜி சாம்பியன்
August 13, 2025, 9:57 am
கிளப்புகளுக்கு இடையிலான நட்புமுறை ஆட்டம் ரியல்மாட்ரிட் வெற்றி
August 12, 2025, 9:18 am
ராஸ்படோர் 26 மில்லியன் யூரோக்களுக்கு நபோலியில் இருந்து அட்லாட்டிகோ மாட்ரிட்டுக்கு மாற்றுகிறார்
August 12, 2025, 9:12 am
கிரீலிஷ் கடன் அடிப்படையில் எவர்டன் அணியில் இணைகிறார்
August 11, 2025, 6:29 pm
ஆயர்தாவார் தமிழ்ப்பள்ளி சக்கரவியூகம் சதரங்கப் போட்டியில் பல இன மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்
August 11, 2025, 10:02 am