நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கிரீலிஷ் கடன் அடிப்படையில் எவர்டன் அணியில் இணைகிறார்

லண்டன்:

மென்செஸ்டர் சிட்டி வீரர் ஜேக் கிரேலிஷ், 2025-26 சீசனுக்காக எவர்டனுடன் கடன் அடிப்படையில் இணைய ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

கடந்த சீசனில் சிட்டி நிர்வாகி பெப் கார்டியோலாவின் திட்டங்களிலிருந்து விலகிய கிரேலிஷ், 

இங்கிலாந்து பிரிமியர் லீக்கில் ஏழு போட்டிகளில் மட்டுமே பங்கேற்றார்.

அமெரிக்காவில் நடைபெறும் கிளப் உலகக் கிண்ண போட்டியில் மென்செஸ்டர் சிட்டி அணிக்காக அவர் விளையாடவில்லை.

குறிப்பாக 29 வயதான அவர் எதிஹாட்டை விட்டு வெளியேறக்கூடும் என்ற ஊகங்களுக்கு மத்தியில் அவர் நீக்கப்பட்டார்.

இந்நிலையில் இங்கிலாந்து பிரிமியர் லீக்கின் புதிய சீசன் ஆகஸ்ட் 18ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இதற்கு முன்னதாக, வாரத்திற்கு 2.04 மில்லியன் ரிங்கிட் சம்பளத்தில்ம் கிரீலிஷை எவர்டன் ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset