நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ரியல்மாட்ரிட்டின் புதிய ஒப்பந்தம்; மெஸ்ஸி உலகின் சிறந்த வீரர்: மஸ்டாண்டுவோனோ

மாட்ரிட்:

மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு பிராங்கோ மஸ்டாண்டுவோனோ அதிகாரப்பூர்வமாக ரியல் மாட்ரிட் அணியின் புதிய வீரரானார்.

18 வயதை எட்டிய அர்ஜெண்டினாவின் சூப்பர்-திறமையாளர், ஒரு மாட்ரிட் வீரராக தனது முதல் பதிவுகள் குறித்து ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார்.

அவர் தனது சகநாட்டவரான லியோனல் மெஸ்ஸி மீதான தனது அபிமானத்தை மறைக்கவில்லை.

அவரையே அவர் சிறந்த கால்பந்து வீரராக  கருதுகிறார்.

அவர் பார்சிலோனாவின் ஒரு பகுதியாக இருந்தபோது அர்ஜெண்டினா ஜாம்பவானுடன் போட்டி கொண்டிருந்த ஒரு கிளப்பிற்கு மாற்றப்பட்ட போதிலும் மெஸ்ஸி போல வேறு யாரையும் நான் பார்க்கவில்லை.

அதே வேளையில் நான் அர்ஜெண்டினாவைச் சேர்ந்தவன் என்பதை பெருமையாக கூறுகிறேன்.

கடந்த காலங்களில், பார்சிலோனா வீரர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோவை சிறந்தவர் என்று சொல்லத் துணியாதது போல, ரியல்மாட்ரிட் வீரர்கள் மெஸ்ஸி சிறந்தவர் என்று சொல்லத் துணிந்ததில்லை.

ஆனால் இப்போது இந்த இரண்டு கிளப்புகளிலிருந்தும் இரண்டு ஜாம்பவான்கள் வெளியேறிய பிறகு நிலைமை மாறிவிட்டது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset