நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஆயர்தாவார் தமிழ்ப்பள்ளி சக்கரவியூகம் சதரங்கப் போட்டியில் பல இன மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்

மஞ்சோங்: 

ஆயர்தாவார் தமிழ்ப்பள்ளி "சக்கர வியூகம் சதரங்க" போட்டியில் 39 பள்ளிகளை சேர்ந்த 212 மாணவர்கள் கலந்துகொண்டு வெற்றிப்பெற்றது மிகவும் மகிழ்சியாக உள்ளது என்று பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஙே கூ ஹாம் இந்நிகழ்வை நிறைவு செய்தபோது கூறினார்.

பள்ளியில் சிறந்த மாணவன் வாழ்க்கையிலும் சிறப்பாக இருப்பான் என்று கூறி விட முடியாது. குறிப்பாக, பள்ளியில் கல்வியில் சிறப்பாக செயல்படாத பலரும் தங்களின் வாழ்வாதாரத்தில் மேம்பாடு கண்டு வருகின்றனர். ஆகையால், மாணவர்கள் தங்களுக்கு பிடித்த துறையில் தங்களின் திறமையை வெளிகொணர முன் வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தற்போது படிவம் 5 வரை மாணவர்கள் கட்டாயமாக கல்வி கற்க வேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது. ஆகையால், கல்வியில் சிறப்பாக செயல்பட முடியாத மாணவர்கள் " திவெட்" துறைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

மஞ்சோங் மாவட்ட அளவில் இந்த சக்கரவியூக சதுரங்க போட்டியை நடத்தினாலும், இதற்கு மற்ற மாவட்டங்களிலிருந்து அதிகமான வரவேற்பு கிடைத்தது. இருப்பினும், இடப் பற்றாக்குறை பிரச்சனையால் 39 பல்லின பள்ளிகளைச் சேர்ந்த 212 மாணவர்கள் மட்டுமே விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டதாக இப்பள்ளியின் தலைமையாசிரியர் டி.தி. நாராயணன் கூறினார்.

இம்முறை வெற்றியாளர்களுக்கு 64 பரிசுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. அதே வேளையில் இப்போட்டி தொடர்ந்து நடைபெற ஏற்பாடுகள் செய்யப்படும். அத்துடன், இப்போட்டியை எப்படி வழிநடத்துவது அல்லது செய்வது குறித்து தம்மை தொடர்புக்கொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழு தலைவர் ஆசிரியர் கவியரசு முனிசாமி தெரிவித்தார்.

இந்நிகழ்வின் நிறைவுவிழாவில் 1 முதல் 10 வரை வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அதே வேளையில் இந்நிகழ்வு வெற்றிப் பெற உதவிய அனைத்து தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் , முன்னாள் மாணவர் சங்கத்தினர் ஆகியோருக்கு ஆயர்தாவார் தமிழ்ப்பள்ளியின் ஏற்பாட்டுக்குழு நிர்வாகத்தினர் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

ஆர். பாலச்சந்தர்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset