நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

உலகின் முதல் மனித சிறுநீர்ப்பை மாற்று அறுவை சிகிச்சை: அமெரிக்க அறுவை சிகிச்சை நிபுணர்கள் சாதனை

வாஷிங்டன்:

உலகின் முதல் மனித சிறுநீர்ப்பை மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு அமெரிக்க அறுவை சிகிச்சை நிபுணர்கள் சாதனை படைத்துள்ளனர். 

மே 4-ஆம் தேதி கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் அமைந்துள்ள Ronald Reagan UCLA மருத்துவ மையத்தில் இந்தச் சிறுநீர்ப்பை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

41 வயதான ஆஸ்கார் லாரின்சாருக்குப்  பல ஆண்டுகளுக்கு முன் புற்றுநோய் காரணமாகச் சிறுநீர்ப்பையின் பெரும்பகுதி அகற்றப்பட்டது. 

அதன் பின் லாரின்சாரின் இரண்டு சிறுநீரகங்களும் பின்னர் அகற்றப்பட்டன. 

மேலும், ஏழு ஆண்டுகளாக அவர் டயாலிசிஸ் செய்து வந்ததாகவும் Ronald Reagan UCLA மருத்துவ அதிகாரிகள் குறிப்பிட்டனர், 

நீண்ட நாள்களுக்குப் பின்  உறுப்பு தானம் செய்பவரிடமிருந்து சிறுநீர்ப்பையும் இரு சிறுநீரகமும் கிடைக்கப்பெற்றன. 

எட்டு மணி நேர அறுவை சிகிச்சையில் அவற்றை வெற்றிகரமாக மருத்துவர்கள்  லாரின்சாரின் உடலில் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். 

முதலில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சிறுநீரகத்தையும், அதைத் தொடர்ந்து சிறுநீர்ப்பையையும் அவரின் உடலில் பொருத்தினர். 

நோயாளியின் சிறுநீரக செயல்பாடு உடனடியாக செயல்பட தொடங்கியதாக சிறுநீர்ப்பை மாற்று அறுவை சிகிச்சையில் ஈடுப்பட்ட மருத்துவ நிபுணர் நசிரி கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset