
செய்திகள் தமிழ் தொடர்புகள்
நடுவானில் மலேசிய பயணிக்கு திடீர் நெஞ்சு வலி: சென்னையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்
சென்னை:
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பயணி ஒருவர் நெஞ்சு வலியால் உயிரிழந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அனைத்துலக விமான நிலையத்திற்கு மலேசியாவில் இருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் 188 பயணிகளுடன் நள்ளிரவு வந்து கொண்டிருந்தது.
அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்த மலேசியரான சிவசுப்பிரமணியம் சோமு (65) என்பவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து விமானத்தில் இருந்த பணிப் பெண்கள் விமானிக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், விமான நிலைய மருத்துவக் குழுவிற்கு தகவல் தெரிவித்து தயார் நிலையில் இருக்க செய்தனர்.
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியதும், உடனடியாக விமான நிலைய மருத்துவ குழுவினர் விமானத்துக்குள் ஏறி பயணியை பரிசோதித்தனர். ஆனால், பயணி ஏற்கனவே உயிரிழந்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து சென்னை விமான நிலைய போலீசார் விரைந்து வந்து பயணியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விமான நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 20, 2025, 11:50 pm
கனமழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழப்பு: மதுரையில் சோகம்
May 20, 2025, 11:54 am
சென்னையில் பரவலாக மழை: இதமான சூழலால் மக்கள் மகிழ்ச்சி
May 18, 2025, 10:54 am
அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
May 16, 2025, 1:39 am
சைபர் க்ரைம் ஹெல்ப்லைனை தொடர்புகொண்டு பானிபூரி, சாக்லேட் கேட்டு அடம்பிடித்த சிறுவன்
May 13, 2025, 4:26 pm
பொள்ளாட்சி பாலியல் வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை
May 11, 2025, 10:49 pm