நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மாதவிடாய்ப் பொருள்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2,000 வைரக் கற்கள்

ஷென்ஜென்:

சீனாவின் ஷென்ஜென் (Shenzhen) நகரில் மாதவிடாய்ப் பொருள்களில் 2,000க்கும் மேற்பட்ட வைரக் கற்களைக் கடத்த முயன்ற பெண் பயணி பிடிபட்டார்.

620 கேரட் வைரக் கற்களின் மதிப்பு சுமார் 48,500 சிங்கப்பூர் வெள்ளி என்று 8 World செய்தித்தளம் குறிப்பிட்டது.

பயணிகளுக்கான சோதனையின்போது சந்தேகத்துக்குரிய வகையில் நடந்துகொண்டவரைச் சுங்கச் சோதனை ஆணையத்தின் அதிகாரிகள் கவனித்தனர்.

விசாரணையில் இரண்டு பைகளில் வைக்கப்பட்டிருந்த மாதவிடாய்ப் பொருள்களில் 2,000க்கும் அதிகமான வைரக் கற்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

ஆதாரம்: 8 World

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset