நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

தனுஷ், சிவகார்த்திகேயன் படங்களின் தயாரிப்பாளர் வீட்டில்  அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை 

சென்னை: 

தமிழ்நாடு துணை முதலமைச்சரின் நெருங்கிய நண்பரும் DAWN PICTURES தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளருமான ஆகாஷ் பாஸ்கரன் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவது தமிழ் திரையுலகை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இரண்டு வாகனங்களில் வந்த ஐந்து அதிகாரிகள் கொண்ட அமலாக்கத்துறை குழு முழு சோதனையில் ஈடுபட்டனர். 

நடிகர்கள் தனுஷின் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி ஆகிய படங்களை DAWN PICTURES நிறுவனம் தயாரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset