நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மூவருக்கு எதிராக தகவல், தொடபு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் மானநஷ்ட வழக்கு விசாரணை அக்டோபர் 2ஆம் தேதி நீதிமன்றத்தால் செவிமடுக்கப்படும்

கோலாலம்பூர்: 

மூவருக்கு எதிராக நாட்டின் தகவல், தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் மேற்கொண்டுள்ள மானநஷ்ட வழக்கு  எதிர்வரும் அக்டோபர் 2ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்தது. 

வான் முஹம்மத் அஸ்ரி,  சுதந்திர சமய போதகர் அஹ்மத் டுசுக்கி அப்துல் ரணி, மற்றும் குவாங் முகநூல் கணக்கு கொண்ட நபர் ஆகிய மூவர் மீது டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் வழக்கு தொடுத்துள்ளார். 

பள்ளிவாசலை அரசியல் பிரச்சார நடவடிக்கைகாக பயன்படுத்துவதாக ஃபஹ்மிக்கு எதிரான கூற்றை ஒன்று வெளியிட்டனர். 

அவர்களின் கூற்று என்பது அடிப்படையற்ற கூற்றாகும். தாம் எந்தவொரு அரசியல் கருத்தரங்குகளையும் பள்ளிவாசலில் நடத்தவில்லை என்று சிலாங்கூர் மாநில இஸ்லாமிய சமய இலாகா உறுதிப்படுத்தியதாகவும் ஃபஹ்மி சொன்னார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset