
செய்திகள் மலேசியா
நச்சு உணவு சம்பவம் தொடர்பாக உணவு மாதிரிகள் ஆய்வு செய்யப்படும்: மொஹ்தார் புங்குட்
ஜொகூர் பாரு:
ஜொகூர் எம்ஆர்எஸ்எம் பள்ளியில் நச்சுணவு சம்பவம் தொடர்பாக உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் அவை ஆய்வுக்கு அனுப்பப்படும் என்று அம்மாநிலச் சுகாதார இயக்குநர் டாக்டர் மொஹ்தார் புங்குட் @ அஹ்மத் தெரிவித்தார்.
பள்ளியின் சிற்றுண்டிசாலை, சமையலறையிலிருந்து ஏழு உணவு மாதிரிகள் உட்பட 21 மாதிரிகளை ஜொகூர் மாநிலச் சுகாதார அமைச்சம் எடுத்துள்ளது.
ஆறு சுற்றுச்சூழல் மாதிரிகள், ஐந்து மருத்துவ மாதிரிகள் மற்றும் மூன்று உணவு சமைப்பவர்களின் மாதிரிகள் என மொத்தம் 21 மாதிரிகள் எடுக்கப்பட்டதை அவர் உறுதிப்படுத்தினார்.
தற்போது பள்ளியின் சமையலறையும் சிற்றுச்சாலையும் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுச் சட்டம் 1988 [சட்டம் 342] பிரிவு 18 (1) இன் கீழ் மூடப்பட்டதாக அவர் கூறினார்.
நச்சுணவு சம்பவத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிய ஜொகூர் மாநிலச் சுகாதார அமைச்சகம் விசாரணை மேற்கொண்டு வருகின்றது.
முன்னதாக, ஜொகூர் எம்ஆர்எஸ்எம் பள்ளியில் பயிலும் 16 மாணவர்கள் நச்சுணவால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, குமட்டல், தலைவலி, காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட 16 மாணவர்களில் 11 பேருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 5, 2025, 6:00 pm
மறைந்த பாக் லாவிற்கு நாடாளுமன்ற மக்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது
May 5, 2025, 5:08 pm
அதிகாரத்திற்காக மொஹைதின் மாறுகிறார்: அக்மல் சாலே
May 5, 2025, 5:07 pm
கெஅடிலான் உச்சமன்றக் கூட்டத்தில் ரபிசி கலந்து கொண்டார்: பிரதமர்
May 5, 2025, 5:06 pm
ஆவணத்தில் நஜிப்பின் கையொப்பத்தை தடயவியல் ஆய்வாளரால் சரிபார்க்க முடியவில்லை
May 5, 2025, 4:22 pm