நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திரெங்கானுவில் ஊழல் செய்த சந்தேகத்தின் பேரில் இரு காவல்துறை அதிகாரிகள் தடுத்து வைப்பு 

கோல திரெங்கானு: 

ஊழல் வாங்கியதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இரு போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஏழு நாட்கள் தடுப்பு காவல் வழங்கப்பட்டது. 

போதைப்பொருள் நடவடிக்கைகள், சூதாட்டம் போன்றவற்றை கண்டுக்கொள்ளாமல் இருக்க அவர்கள் லஞ்ச பணத்தைப் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டது 

ஒரு போலீஸ் அதிகாரி 3 ஆயிரம் ரிங்கிட் லஞ்சமும் மற்றொரு போலீஸ் அதிகாரி 2 ஆயிரம் ரிங்கிட் லஞ்சமும் பெற்றதாக சொல்லப்படுகிறது. 

திரெங்கானு மாநில எம்.ஏ.சி.சி அலுவலகத்தில் விளக்கம் அளிக்க சென்ற போது அவர்கள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். 

திரெங்கானு மாநில எம்.ஏ.சி.சி இயக்குநர் ஹஸ்ருல் ஷஸ்ரீன் அப்துல் யசீட் அவர்களின் கைது நடவடிக்கைகளை உறுதிப்படுத்தினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset