நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மறைந்த பாஹ் லாவிற்கு நாடாளுமன்ற மக்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது 

கோலாலம்பூர்: 

முன்னாள் பிரதமர் துன் அப்துல்லாஹ் அஹ்மத் படாவி காலமானதைத் தொடர்ந்து இன்று நாடாளுமன்ற மக்களவையில் இரங்கல் தீர்மானம் தெரிவிக்கப்பட்டது. 

நாட்டின் முன்னாள் பிரதமரான துன் அப்துல்லாஹ் அஹ்மத் படாவி மலேசியாவின் ஐந்தாவது பிரதமராக பணியாற்றினார். அப்துல்லாஹ் அஹ்மத் படாவி 2003 முதல் 2008 வரை பிரதமராக இருந்தார். 

மலேசியாவின் தலைசிறந்த தலைவராக துன் அப்துல்லாஹ் அஹ்மத் படாவி விளங்கினார் என்றும் அவரின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும் என்று மக்களவை சபாநாயகர் டான்ஶ்ரீ ஜொஹாரி அப்துல் கூறினார். 

அவருக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அல்- ஃபதிஹா வழிபாட்டினை மேற்கொண்டனர். 

முன்னதாக, கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி துன் அப்துல்லாஹ் அஹ்மத் படாவி தனது 85ஆவது அகவையில் காலமானார். நாட்டு மக்களால் துன் அப்துல்லாஹ் அஹ்மத் படாவி பாஹ் லா என்று அன்போடு அழைக்கப்பட்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset