நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கியது: மக்கள் தேவையின்றி வெளியே தலைகாட்ட வேண்டாம் என்று அறிவுத்தப்பட்டுள்ளது 

சென்னை 

வெயிலின் உக்கிரம் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கியது. இன்று முதல் எதிர்வரும் மே 28ஆம் தேதி வரை வெயில் சுட்டெரிக்கும். எனவே, மக்கள் தேவையின்றி வெளியே தலைகாட்ட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் இருந்து வெயில் வாட்டி எடுத்து வருகிறது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதம் பல மாவட்டங்களில் வெயில் சதத்தை கடந்தது. இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். 

வெயிலின் தாக்கத்தால் காலை 11 மணிக்கு மேல் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க தொடங்கினர்.

பெரும்பாலானோர் வீடுகளிலேயே முடங்கிய காட்சியை காண முடிந்தது. இந்நிலையில், வெயிலின் உக்கிரம் என்று அழைக்கப்பட கூடிய அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது. தமிழ் பஞ்சாங்க அடிப்படையில், தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 4ம் தேதி முதல் 28ம் தேதி வரை ‘அக்னி நட்சத்திரம்’ என்று அழைக்கப்படும் ‘கத்திரி வெயில்’ காலம் கணக்கிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், 25 நாட்களுக்கு நீடிக்கும் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது.

அக்னி நட்சத்திரம் தொடங்கும் போது முதல் 7 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகி கொண்டே போகும். 21வது நாளில் வெயில் உச்சத்தை தொடும். அதன்பிறகு படிப்படியாக வெயில் குறைய தொடங்கும்.

அதீத நீரிழப்பு உடல் செயல்பாட்டை பாதிக்கலாம் மற்றும் பிற உடல்நலப் பிரச்னைகளை அதிகரிக்கலாம். எனவே கவனமாக இருந்து உடலைக் காத்துக்கொள்ள வேண்டும். பருத்தி ஆடைகளை அணிவதுடன் வெளியே செல்லும்போது குடைகளை எடுத்து செல்வது நல்லது. பொதுவாக, அக்னி நட்சத்திரம் காலகட்டத்தில் கடும் வெயில் சுட்டெரிக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset