நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

கொல்கத்தா தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: 

கொல்கத்தாவில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், குழந்தைகள் தியா, ரிதன் ஆகியோரும் மற்றும் பலரும் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்; நெஞ்சம் கலங்கினேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, இத் துயர்மிகு நேரத்தில் அவர்களது குடும்பத்தினருக்கு நமது அரசு துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் தனியார் நட்சத்திர விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவர் உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.

கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத்தை அடுத்த ஜோதிவடத்தை சேர்ந்தவர் பிரபு (40). இவர் கற்றாழை மூலப்பொருட்களை கொண்டு பொருட்கள் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். மனைவி மதுமிதா, மகள் தியா (10), மகன் ரிதன் (3).

பிரபு அவர் மனைவி, குழந்தைகள், அவரது மாமனார் முத்துகிருஷ்ணன் (61) ஆகியோருடன் கொல்கத்தாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். கொல்கத்தா படாபஜார் ரபிந்தரசரணி பகுதியில் உள்ள 5 மாடிகள் கொண்ட தனியார் ஹோட்டல் ரிதுராஜில் குடும்பத்துடன் பிரபு தங்கியிருந்துள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset