
செய்திகள் மலேசியா
புத்ரா ஹைட்ஸ் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைக்க 40 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது: மந்திரி புசார்
ஷாஆலம்:
சுபாங் ஜெயாவின் புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைப்புப் பணிகளுக்காக மொத்தம் 40 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிரூடின் ஷாரி இதனை தெரிவித்தார்.
இந்த ஒதுக்கீட்டில் மத்திய அரசின் ஒதுக்கீடுகள், பொது பங்களிப்புகள் அடங்கும்.
புத்ரா ஹைட்ஸைச் சுற்றியுள்ள குடியிருப்புகளுக்கான புதுப்பித்தல் பணிகளை சம்பந்தப்பட்ட வீட்டுப் பகுதியின் மேம்பாட்டாளராக சைம் டார்பி மேற்கொள்ளும்.
மேலும் கம்போங் சுங்கை பாரு பணிகளை எஸ்பிஎன்பி மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.
வீட்டு புதுப்பித்தல் செயல்முறையில் மின் இணைப்பு போன்ற அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்தும்.
30,000 ரிங்கிட்டுக்கும் குறைவான சிறிய சேதங்களுக்கு, வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீட்டு பழுதுபார்க்கும் பணிகளை சொந்தமாக மேற்கொள்ளம்.
பின்னர் பிபிடியிடம் அதற்கான செலவை திரும்ப பெறலாம் என்று அவர் இன்று ஷாஆலமில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm