
செய்திகள் மலேசியா
மியான்மாரில் மீட்கப்பட்ட இரண்டு உடல்களின் அஸ்தியுடன் 16 பேர் நாளை நாடு திரும்புவார்கள்: வெளியுறவு அமைச்சர்
புத்ராஜெயா:
மியான்மாரில் மீட்கப்பட்ட இரண்டு உடல்களின் அஸ்தியுடன் 16 பேர் நாளை நாடு திரும்புவார்கள்.
வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசான் இதனை கூறினார்.
மியான்மாரின் மியாவாடியில் வேலை வாய்ப்பு மோசடி கும்பலுக்கு பலியான இரண்டு மலேசியர்களின் அஸ்தி நாளை மலேசியாவுக்கு கொண்டு வரப்படவுள்ளது.
அதே வேளையில் பாதிக்கப்பட்ட 16 பேரும் நாடு திரும்பவுள்ளனர்.
இந்த கும்பலால் பாதிக்கப்பட்ட நான்காவது குழுவான மலேசியர்களை திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பேங்காக்கில் உள்ள மலேசியத் தூதரக அதிகாரிகள் தாய்லாந்தின் மே சோட்டுக்கு தூதரகத்திற்கு பயணம் மேற்கொண்டு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
16 மலேசியர்கள் கொண்ட குழு இன்று மியான்மார் - தாய்லாந்து எல்லையைக் கடந்து விட்டனர்.
சிறப்பு வாடகைப் பேருந்தைப் பயன்படுத்தி சாலை வழியாக அவர்கள் அழைத்து வரப்படுவதாகவும் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm