
செய்திகள் மலேசியா
மியான்மாரில் மனிதாபிமான உதவிகளை கட்டுப்பாடுகள் இல்லாமல் தொடர மலேசியாவும் வியட்நாமும் ஒப்புக் கொண்டுள்ளன: பிரதமர்
புத்ராஜெயா:
மலேசியாவும் வியட்நாமும் அனைத்து மியான்மார் மக்களுக்கும் கட்டுப்பாடுகள் இல்லாமல் மனிதாபிமான உதவிகளைத் தொடர ஒப்புக் கொண்டுள்ளன.
வியட்நாமிய பிரதமர் ஃபாம் மின் சின் உடனான உரையாடலில் இது ஒப்புக் கொள்ளப்பட்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இந்த விவகாரத்தில் மனிதாபிமான உதவிப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து தரப்பினரும் போர்நிறுத்தத்தைத் தொடர்வது முக்கியம்.
மார்ச் மாத இறுதியில் மியான்மாரைத் தாக்கிய நிலநடுக்கத்திற்கு சில வாரங்களுக்குப் பிறகு, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பு மனிதாபிமானத் தேவைகள் இன்னும் அவசரமாக இருப்பதாக எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக தங்குமிடம், சுத்தமான நீர் விநியோகம், சுகாதாரம், சுகாதாரப் பராமரிப்பு அடிப்படையிலான உதவிகள் தேவைப்படுகிறது என்று பிரதமர் கூறினார்.
முன்னதாக இந்த பிரச்சினையைத் தவிர, இரு தலைவர்களும் சமீபத்திய முன்னேற்றங்கள், அமெரிக்கா விதித்த வரிகளுக்கு எதிரான கூட்டு ஆசியான் நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm