
செய்திகள் மலேசியா
சுற்றுலா பயண மோசடியில் சமூக ஊடகங்களில் செல்வாக்கு கொண்டவரின் முன்னாள் கணவர் கைது: டத்தோ குமார்
ஜொகூர் பாரு:
சுற்றுலா பயண மோசடியில் சமூக ஊடகங்களில் செல்வாக்கு கொண்டவரின் முன்னாள் கணவர் கைது செய்யப்பட்டார்.
ஜொகூர் மாநில போலிஸ் தலைவர் தலைவர் டத்தோ எம். குமார் இதனை கூறினார்.
தென் கொரியாவிற்கு சுற்றுலாப் பயணைத்தை ஏற்பாடு செய்து தருவடில் அவர் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் விசாரணைகளுக்கு உதவ சமூக ஊடகங்களில் செல்வாக்கு மிக்க தொழில்முனைவோரின் முன்னாள் கணவரை போலிசார் கைது செய்துள்ளனர்.
அவர் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்திய அவர், மேலும் கருத்து தெரிவிக்கவில்லை.
கைது குறித்து போலிசார் விரைவில் அறிக்கை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சியோலை தளமாகக் கொண்ட செல்வாக்கு மிக்கவர் இன்ஸ்டாகிராம், டிக்டாக் போன்ற சமூக ஊடக தளங்களில் பயணம், வாழ்க்கை முறை உள்ளடக்கத்திற்கு பெயர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm