நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

‘வீரா’ குறும்படம் – கலாசார உரிமைகள் மற்றும் தலைமைத்துவத்தை உரைக்கும் உணர்வுப்பூர்வமான படைப்பு

பெட்டாலிங் ஜெயா:

IBP ஸ்டுடியோ தயாரித்த ‘வீரா’ குறும்படக் கதையம்ச இசை வீடியோ, LFS PJ State திரையரங்கில் 180 பேர் கொண்ட பார்வையாளர்கள் முன்னிலையில் வெகு விமரிசையாக வெளியிடப்பட்டது.

மலேசிய தமிழ் சமூகத்தின் கலாசார அடையாளங்கள், சட்ட உரிமைகள் மற்றும் தலைமைத்துவத்தை மையமாகக் கொண்ட இந்த படம், உணர்வுப்பூர்வமும் தாக்கமும் மிக்கதாக இருந்தது. இந்த குறும்படம் தற்போது IBPStudiosMY யூடியுப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

சட்ட அடிப்படையில் ஒரு குறும்படம்

கோவில் நிலத்தை காக்கும் ஊர்மக்களின் போராட்டம் இந்தக் கதையின் மையம். இது மலேசிய அரசியலமைப்புச் சட்டம் 11 மற்றும் தண்டனைச் சட்டப்பிரிவுகள் 295, 296 ஆகியவற்றை முன்னிறுத்தி படமாக்கப்பட்டுள்ளது.

கிளிப்ஷாட் நேஷ், கதாநாயகனாகவும்,  IBP Studios இயக்குநராகவும் தனது நடிப்பால் பாராட்டைப் பெற்றார். இதில் சமூக ஊடக பிரபலம் நிலா லிங்கேஸ்சும் நடித்துள்ள்ளார். இதற்கு மைக்கேல் கிறிஸ் மற்றும் கோருஸ் ஹுக்ஸ் இசை அமைத்துள்ளனர்.

டாக்டர் எட்வின் ஆனந்த் (Coruz Hooks) இயக்கிய இந்த குறும்படம்,  2023ஆம் ஆண்டு காராக் சிவன் கோயில் வளாகத்தில் படமாக்கப்பட்டது. அந்த இடம், கதையின் ஆன்மீக அடித்தளத்தையும், சமூக உணர்வையும் வலிமையாக பிரதிபலிக்க உதவியதாக இக்குறும்படத்தின் இயக்குநர் கூறினார்.

முன்னாள் அமைச்சர் வேதமூர்த்தி

இதன் அறிமுக விழாவில் முன்னாள் அமைச்சர் வேதமூர்த்தி சிறப்பு விருந்தினராக நிகழ்வில் கலந்து கொண்டு, சமூக உரிமைகள் மற்றும் கலாசாரப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

IBP Studios மலேசிய தமிழ் சமூகத்தின் குரலாக திகழ, ‘வீரா’ ஒரு அடுத்த கட்ட முன்னேற்றமாக விளங்குகிறது.

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset