நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹலால் சின்னங்களை அங்கீகரிக்க மலேசியாவும் இந்தோனேசியாவும் ஒப்புக்கொண்டுள்ளன: ஜாஹித்

ஜாகர்த்தா:

ஹலால் சின்னங்களை அங்கீகரிக்க மலேசியாவும் இந்தோனேசியாவும் ஒப்புக்கொண்டுள்ளன.

துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.

மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையின் (ஜாக்கிம்) ஹலால் சின்னத்தை இந்தோனேசியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் ஹலால் பொருட்களுக்கு புதிய நிலையான இயக்க நடைமுறைகள் இல்லாமல் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

இதனை மலேசியாவும் இந்தோனேசியாவும் ஒப்புக் கொண்டுள்ளன.

மலேசியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான இந்தோனேசிய ஹலால் சான்றிதழை மலேசியா அங்கீகரிக்கும்.

நேற்று மத்திய ஜாகர்த்தாவில் உள்ள இஸ்தானா மெர்டேகாவில் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோவை மரியாதையுடன் சந்தித்த பிறகு அவர் இதனை  கூறினார்.

இது மாற்றத்திற்கான ஒரு ஊக்கியாக உள்ளது, தொழில்துறை வீரர்களின் அர்ப்பணிப்புக்காக நாம் பாராட்ட வேண்டும்.

இந்தோனேசிய மத அமைச்சரிடமிருந்தும், துணை அதிபர்  ஜிப்ரான் ரகாபுமிங் ரக்காவுடன் நான் கலந்துரையாடியபோதும் இதற்கு ஒப்புதல் கிடைத்தது என்பதைக் குறிப்பிட தேவையில்லை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset