நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

1993ஆம் ஆண்டு கூட்டுறவுச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் உருவாக்கத்தில் உள்ளது: இவோன் பெனடிக்

கோலாலம்பூர்:

1993ஆம் ஆண்டு கூட்டுறவுச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் உருவாக்கத்தில் உள்ளது.

தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் இவோன் பெனடிக் இதனை கூறினார்.

கூட்டுறவுகளை ஒழுங்குபடுத்துவதில் அதன் செயல்திறனை உறுதி செய்வதற்காக பல்வேறு தரப்பினரை உள்ளடக்கிய ஒரு ஈடுபாட்டு அமர்வை நடத்தும் முயற்சிகளை அமைச்சு மேற்கொண்டு வருகிறது.

இன்றுவரை அமைச்சு, மலேசிய கூட்டுறவு ஆணையம் 295 கூட்டுறவு நிறுவனங்கள்,  47 அரசு நிறுவனங்களின் பங்களிப்புடன் 10  அமர்வுகளை நடத்தி, அவர்களின் கருத்துக்களைப் பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

இது தொடர்பில் ஒரு கேள்வித்தாள் விநியோகிக்கப்பட்டுள்ளது.  இதற்கு 1,058 கூட்டுறவு நிறுவனங்கள் பதிலளித்துள்ளன.

புதிய கூட்டுறவுச் சட்டத்தை வரைவதன் முக்கிய குறிக்கோள், சட்டத்தை தாராளமயமாக்குவதன் மூலமும், கூட்டுறவுகளுக்கான ஒழுங்குமுறை அமைப்பாக மலேசிய கூட்டுறவு ஆணையம் அதிகாரம் அளிப்பதன் மூலமும் கூட்டுறவு இயக்கத்தை மேம்படுத்தும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset