
செய்திகள் மலேசியா
எரிவாயு வெடி விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவர்களுக்கு முதல் 3 மாத வீட்டு வாடகை தொகை வியாழக்கிழமை வழங்கப்படும்: அமிருடின் ஷாரி
ஷா ஆலம்:
புத்ரா ஹைட்ஸில் ஏற்பட்ட எரிவாயு குழாய் வெடி விபத்தில் பாதிக்கப்பட்ட 396 குடும்பத் தலைவர்களுக்கு முதல் மூன்று மாதங்களுக்கான வீட்டு வாடகை நிதி வியாழக்கிழமை வழங்கப்படும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த நிதி அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்த வெடி விபத்தில் சேதமடைந்த வீட்டின் குடும்பத் தலைவர்களுடன் வியாழக்கிழமை சந்திப்பு நடத்தப்படும் என்றார் அவர்.
பாதிக்கப்பட்ட வீடுகளில் ஏற்பட்டுள்ள பழுதுபார்ப்பு பணிகள் குறித்த விளக்கமும் அன்று தெரிவிக்கப்படும் என்றார் அவர்.
அதே நேரத்தில், பழுதுபார்ப்பு தொடர்பான திட்டங்களை தனது தரப்பு அனுப்பியுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட வீடுகளை எவ்வாறு சரி செய்வது என்பது குறித்த அமைச்சரவையின் முடிவுக்காகக் காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm