
செய்திகள் மலேசியா
ஆயிர் கூனிங் சட்டமன்றத் இடைத்தேர்தலில் 70 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் வாக்களிப்பர்: தேர்தல் ஆணையம்
தாப்பா:
சனிக்கிழமை நடைபெறும் ஆயிர் கூனிங் சட்டமன்றத் இடைத்தேர்தலில் 70 விழுக்காட்டுக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்களிக்கும் தினமன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் வாக்காளர்கள் காலை முதல் வாக்களிக்க செல்லுமாறு தேர்தல் ஆணையத் தலைவர் டத்தோஸ்ரீ ரம்லான் ஹருன் அறிவுறுத்தியுள்ளார்.
இன்று நடைபெற்று வரும் முன் கூட்டிய வாக்களிப்பில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள 500 வாக்காளர்களில் 90 விழுக்காட்டினர் வாக்களிப்பார்கள் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இன்று காலை 8 மணிக்குத் தொடங்கிய முன் கூட்டிய வாக்களிப்பு தற்போது சுமூகமாக நடைபெற்று வருகின்றது.
இவ்வாண்டு பிப்ரவரி 22-ஆம் தேதி மாரடைப்பால் ஆயிர் கூனிங் சட்டமன்ற உறுப்பினர் இஷாம் ஷாருடின் காலமானார்.
அதனைத் தொடர்ந்து இத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm