
செய்திகள் மலேசியா
ஆயிர் கூனிங் இடைத்தேர்தல் முன்கூட்டிய வாக்களிப்பு: சுமூகமாக நடைபெற்று வருகிறது
தாப்பா:
ஆயிர் கூனிங் இடைத்தேர்தலை முன்னிட்டு முன்கூட்டிய வாக்களிப்பு சுமூகமாக நடைபெற்று வருகிறது.
ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான இரண்டு முன்கூட்டிய வாக்களிப்பு மையங்கள் இன்று காலை 8 மணிக்கு ஒரே நேரத்தில் திறக்கப்பட்டன.
பீடோர் ஏபிஆர் டிரான்சிட் பொழுதுபோக்கு மண்டபம், தாப்பா போலிஸ் நிலையத்தின் அங்கெரிக் மண்டபம் ஆகியவை இடங்களில் அந்த வாக்களிப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளது.
மூன்று வழிகளில் ஆரம்பகால வாக்களிப்பு செயல்பாட்டில் 500 போலிஸ் அதிகாரிகள், அவர்களது மனைவிகள் ஈடுபட்டனர்.
பட்டாலியன் 3 பிஜிஏ இல் உள்ள ஆரம்ப வாக்களிப்பு மையம் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். தாப்பா போலிஸ் நிலையத்தில் மதியம் 12 மணிக்கு மூடப்படும்.
காலை 9.30 மணி நிலவரப்படி 22.30 சதவீத வாக்கு பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm