
செய்திகள் மலேசியா
சொங்கரான் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட சண்டை குறித்து போலீசார் விசாரணை
பெட்டாலிங் ஜெயா:
1 உட்டாமா ஷாப்பிங் சென்டரின் வெளிப்புற கார் நிறுத்துமிடத்தில் நடந்த சொங்கரான் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட சண்டை குறித்துக் காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இது குறித்து பொதுமக்கள் எந்தப் புகாரும் செய்யவில்லை என்றாலும் இந்த விவகாரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் ACP Shahrulnizam Ja’far டாமன்சாரா காவல் நிலையத் தலைவருக்கு உத்தரவிட்டுள்ளார்.
சண்டை தொடர்பான காணொலி தற்போது சமூக ஊடகத்தில் வைரலாகி வருகின்றது.
அக்காணொலியில் சொங்கரான் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட சண்டையின் விளைவாக ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வதையும் மேலே பிளாஸ்டிக் நாற்காலிகள் வீசுவதையும் காண முடிந்தது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm